அல்லாஹ்வை அஞ்சுங்கள்
Jul 2nd 2008அபூ உஸாமாபொதுவானவை
Comments Off
ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
Jun 21st 2008அபூ சஆத்கிளைகள் & செய்திகள் & நிகழ்ச்சிகள் & பொதுவானவை
கடந்த 15-06-2008 அன்று ஊட்டி YWCA ஹாலில் ஜம்மிய்யித்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) சார்பாக மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு நடைபெற்றது மாநாட்டில் பல்லாயிரக்கான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாநாட்டின் முதல் அமர்வுவை, காலை 9:30 மணியளவில் JAQH கோவை மாவட்ட துணைத்தலைவர் சகோ. A கலீலுர் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையாற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மௌலவி. I. ஹாஜா முஹைதீன் ஃபிர்தௌஸி அவர்கள் குர்ஆன் எச்சரிக்கும் சமூக கொடுமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை என்ற தலைபில் மௌலவி. MP உஸ்மான் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
குர்ஆன் கூறும் பெண்ணுரிமை என்ற தலைபில் மௌலவி. MM அப்துல் காதிர் உமரீ சிறப்புரையாற்றினார்
அதனை தொடர்ந்து பேராசிரியர் TC அப்துல் மஜீத் (JAQH மாநில துணைத்தலைவர்) குர்ஆன் கூறும் நற்பண்புகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள் பின் லூஹர் தொழுகைகாக இடைவெளி கொடுக்கப்பட்டது.
மதிய உணவிற்க்கு பின் 3:00 மணியளவில் ஊட்டி JAQH கிளை பொருளாளர் சகோ. I பதுருத்தீன் அவர்கள் தலைமையில் இரண்டாம் அமர்வு தொடங்கியது.
குர்ஆன் கூறும் பிரார்ததனைகள் என்ற தலைப்பில் சகோ. M அப்துல் ஜலீல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அஸர் தொழுகைக்கு பிறகு ஊட்டி JAQH தலைவர் M உமர் அவர்களின் தலைமையில் மூன்றாம் அமர்வு 4:30 மணியளவில் தொடங்கியது. குர்ஆன் ஏற்படுத்திய சமுதாய புரட்சி என்ற தலைப்பில் JAQH மாநில துணைச் செயலாளர் சகோ. AMG மசூது அவர்களின் உரையை தொடர்ந்து குர்ஆனும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் JAQH தலைமையக அழைப்பாளர் சகோ. கோவை S. அய்யூப் அவர்கள் உரையாற்றினார்கள்.

மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இறுதி அமர்வு சுமார் 7 மணியளவில் கோவை மாவட்ட JAQH தலைவர் சகோ. KN முஹம்மத் மலங்கு அவர்கள் தலைமையில் தொடங்கியது. JAQH மாநில தலைவர் மௌலவி S. கமாலுத்தீன் மதனீ அவர்கள் குர்ஆன் கூறும் அழைப்புபணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து JAQH ஊட்டி கிளை செயலாளர் சகோ. M. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரையுடன் மாநாடு மிக சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ்-விற்கே.
மாநாட்டில் பல்வேறு சகோதரர்கள் இஸ்லாத்தினை தாங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தாங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார்கள் - வல்ல அல்லாஹ் அவர்களை இறுதிவரை நேர்வழியில் இருக்க செய்வானாக- ஆமீன்
செய்தி: பிரேம் நஸிர் JAQH கிளை செயலாளார் தென்காசி
Jun 9th 2008அபூ உஸாமாஅறிவிப்புகள் & கல்லூரிகள் & கிளைகள் & செய்திகள் & பொதுவானவை
Jun 6th 2008அபூ சஆத்கிளைகள் & நிகழ்ச்சிகள் & பொதுவானவை
01-06-2008 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தென்காசி ஜாக் மார்கஸில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு ஜாக் மாநில அழைப்பாளர் சகோ. அய்யூப் அலி ஃபைஜி அவர்கள் தலைமைதாங்கினார். மாநில அழைப்பாளர் சகோ. கோவை மசூது அவர்கள் குர்ஆன் ஹதீஸ் இயக்கம் ஏன் ஏதற்க்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்திற்கு சுமார் 200 க்கும் மேற்பட்போடோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பிரேம் நஸீர் - தென்காசி கிளை செயலாளர்
Jun 3rd 2008அபூ உஸாமாபொதுவானவை
May 23rd 2008அபூ உஸாமாஅறிவிப்புகள் & நூலகம் & பொதுவானவை
அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்
இந்த மாத இதழில்
மார்க்க கல்வி ஏழை மக்கள் தான் பயில வேண்டுமா ? தலையங்கம்
மற்றும் பல தலைப்புகளில்
வாங்கி படித்து பயன் அடைவீர்
துபையில் தொடர்புக்கு : SULAIMAN 050 2716801
May 22nd 2008அபூ உஸாமாஅறிவிப்புகள் & செய்திகள் & நிகழ்ச்சிகள் & பொதுவானவை
இறைவனின் திருப்பெயரால்…
ஈருலக வெற்றிக்கு இஸ்லாம் ஒன்றே வழி
இன்ஷா அல்லாஹ், குமரி மாவட்டத்தில் மாபெரும்
ஒருநாள் இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு
இடம்: எம்.கே. ஆடிட்டேரியம், வேர்கிளம்பி, குமரிமாவட்டம்
நாள்: 31-05-2008 சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி.
இறைவனின் திருப்தியை அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்யவேண்டிய மனிதசமுதாயம் இன்று மேல் நாட்டவர்களின் வழிமுறையை பின்பற்றி செல்லத் துவங்கிவிட்டது.
தன்னைப்படைத்த இறைவன் யார்? எதற்காக படைத்தான்? மரணித்த பின் மனிதனின் நிலை என்ன? இதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் தங்கள் மனோ இச்சைக்கு அடிமையாகி சீரழிந்து தடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கின்றது மனிதரில் ஒரு கூட்டம்.
இறைவேதம் கூறும் கொள்கை தெரியாமல், திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கம் புரியமல், தர்ஹா, தாயத்து, தட்டு, தரீக்கா ஆகிவற்றை இதுதான் இஸ்லாம் என்று மக்களை நரகத்தின் விளிம்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறது மற்றொரு கூட்டம்.
இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை அறிய முன் வராமல் உலகாதாயக்கல்லியை மட்டும் பயின்று, ஒழுக்கக்கல்லியை கற்காமல் இன்டர்நெட், செல்போன் என சுற்றித்திறிகிறது மாணவர்களில் ஒரு கூட்டம்.
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.
இஸ்லாமியக் கொள்கை விளக்க மாநாடு!
குடும்பத்துடன் அணி திரண்டு வாரீர்!!
உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!!!
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
நிகழ்ச்சி ஏற்பாடு
ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்),
கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புக்கு: 9345235598, 9442076269, 9486215365
May 21st 2008அபூ உஸாமாகிளைகள் & செய்திகள் & நிகழ்ச்சிகள் & நிர்வாகம்
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்…..)
நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளையின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டததில் தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் அமீர் S.கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழச்சியில் அமீரக ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் அமீரக நிர்வாகிகள் தோந்தெடுக்கப்பட்டார்கள்.
செய்திகள் : JAQH அமீரகம்
May 20th 2008அபூ சஆத்அறிவிப்புகள் & கிளைகள்
ஒரு நாள் இஸ்லாமிய கொள்கை விளக்க மாநாடு
இடம்: வேர்கிளம்பி - குமரி மாவட்டம்
நாள்: 31-05-2008
அழைக்கின்றது